ETR.FM

கோட்டாபயவின் மனு 2027 மார்ச்சில் விசாரணை!

25.11.2026 15:17 1 நிமிட வாசிப்பு
கோட்டாபயவின் மனு 2027 மார்ச்சில் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

குறித்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை எதிர்வரும் 2027 மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பிரியமான தோழி