ETR.FM

ETA அனுமதி பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதி!

25.11.2026 15:20 2 நிமிட வாசிப்பு
ETA அனுமதி பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதி!
இலங்கையின் மின்னணு பயண அங்கீகார (ETA) விண்ணப்பக் கட்டமைப்பு தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதால், பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியைப் பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நவம்பர் 23ஆம் திகதிய சுற்றறிக்கை மூலம் இந்தத் தற்காலிக நடைமுறையை அறிவித்துள்ளது. கணினிக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ETA விண்ணப்ப இணையத்தளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தகுதியுடைய பயணிகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் நுழைவுப் பகுதிகளை வந்தடைந்ததும், குடிவரவு அதிகாரிகளிடம் மின்னணு பயண அங்கீகாரம் அல்லது வருகை விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களும் இந்தத் தற்காலிகச் சலுகைக்குள் உள்ளடங்குகின்றனர். இந்த நடைமுறையைச் சீராக முன்னெடுக்குமாறு விமான நிறுவனங்களுக்கும் அவற்றின் தரைக் கையாளல் முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 2026 மே 25ஆம் திகதி முதல் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை இலவச சுற்றுலா ETA அனுமதிகளை வழங்கி வருகின்றது. எனினும், விமான நிலையத்தில் வழங்கப்படும் அனுமதிகளுக்கும் இந்தக் கட்டண விலக்கு பொருந்துமா என்பது தொடர்பில் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.குறிப்பு: இந்தத் தற்காலிக நடைமுறை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
      
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பிரியமான தோழி