ETR.FM

ஊடக அடக்குமுறை வேண்டாம்!

26.11.2026 08:51 1 நிமிட வாசிப்பு
ஊடக அடக்குமுறை வேண்டாம்!
ஊடகங்களுக்கு அரச ஒழுங்குமுறைப்படுத்தல் பொருத்தமானதல்ல; சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டுமே முக்கியமானது. எனவே, ஊடக அடக்குமுறை பொருத்தமற்றது என்பதால் அவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,ஊடகத் துறை தொடர்பாக ‘இலங்கை பட்டய ஊடக வல்லுநர்கள் நிறுவகத்தை’ நிறுவுவதற்கு அரசாங்கம் முன்னெடுப்பு எடுத்துள்ளது. தொழில்சார் தரம், அறிவு, திறன்களை மேம்படுத்தி ஊடகத் துறைக்குள் தரத்தை உயர்த்த வேலைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவது நல்லது என்றாலும், அரச ஒழுங்குமுறைப்படுத்தல் பொருத்தமானதல்ல; சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டுமே முக்கியமானது. ஊடக அடக்குமுறை பொருத்தமற்றது என்பதால் அவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம்'' என்றார்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE உங்கள் விருப்பம்