இளையோர் மத்தியில் எச்ஐவி தொற்றாளர்கள் அதிகரிப்பு!
26.11.2026
08:47
1 நிமிட வாசிப்பு
20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் எச்ஐவி தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவின் கீழ் 88 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன,"தற்போது இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது 708 புதிய எச்ஐவி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 1987 ஆம் ஆண்டு முதலாவது எச்ஐவிநோயாளர் பதிவான காலத்துடன் ஒப்பிடுகையில், நாம் வருடாந்தம் புதிய நோயாளர்களை அடையாளம் கண்டு வருகிறோம். 2026 மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது 8,111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டின் மூன்று காலாண்டுகளை எடுத்துக்கொண்டால், எமக்கு இதுவரை 15 - 24 வயதுப் பிரிவில் 88 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்." எனத் தெரிவித்தார்.