ETR.FM

ஊழலை எதிர்க்கும் அரசாங்கத்திடம் கொள்கையில்லை.

28.11.2026 14:57 1 நிமிட வாசிப்பு
ஊழலை எதிர்க்கும் அரசாங்கத்திடம் கொள்கையில்லை.

இந்த அரசாங்கம் மீதான எனது குற்றச்சாட்டு என்னவென்றால், மிகவும் சிறந்த விடயமான ஊழல் எதிர்ப்புத் திட்டத்தைத் தவிர வேறு எந்த கொள்கைகள் எதுவுமே இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவத் திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஏழுசுவுநுஓ' 5 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து பேசிய அவர்

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைப் பரப்பிக் கொண்டு முன்னோக்கிச் செல்வதைத் தவிர அங்கே வேறு எதுவும் இல்லை. 

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காகத் தலைமைத்துவத்தை ஏற்குமாறு இளைய தலைமுறையினரிடம் கோரிய சந்திரிகா குமாரதுங்க, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவம் வழங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். 

நீங்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உள்ளவர்களும் பல்வேறு கட்சிகளில் உள்ளவர்களும் தலைமைத்துவத்தை ஏற்கும் வரை காத்திருக்காதீர்கள். கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் எவ்வாறு கோர முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்