முப்படையினரை பலப்படுத்த 2030ல் மறுசீரமைப்புத் திட்டம்!
29.11.2026
15:30
4 நிமிட வாசிப்பு
அரசாங்கம் என்றவகையில் தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமே தவிர, பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் அடக்குவதற்கும் தேவையான முறையில் முப்படையினரை பலப்படுத்த, 2030ல் மறுசீரமைக்கும் திட்டம் ஒன்று எமக்கு இருக்கிறது. அதற்காக ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிக்க இருக்கிறோம் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்எந்தவொரு நாட்டினதும் பொருளாதார பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அரசியல் பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாப்பதன் மூலமே தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. 2020 காலப்பகுதியில் ஏற்பட்ட கொவிட் நெருக்கடி ஊடாக பொருளாதார நெருக்கடி, அதனுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தேசிய பாதுகாப்பு எனும்போது அது பரந்துபட்ட விடயமாகும்.மேலும் எமது முப்படைகள் இந்த வலயத்தில் இருக்கும் சிறந்த படைகளாகும். அதனால் முப்படையினரை மேலும் திறமையாக பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு செல்கிறோம்.அதனால் ராணுவத்தை மறுசீரமைப்பு செய்து, நவீன தொழிநுற்ப கருவிகளை பயன்படுத்தும் பயிற்சிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.அதேநேரம் முற்படையினர் கடந்த காலத்தில் முற்றாக அரசியல் மயமாக்கப்பட்டிருந்தனர். அதனை நாங்கள் முற்றாக நீக்கி, அவர்கள் சுயாதீனமாக செயற்பட இடமளித்திருக்கிறோம். அதனால்தான் தித்வா போன்ற தேசிய அனர்த்த நிலைமைகளின்போது முற்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவை மிகவும் சிறப்பானதாகும். அவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாகவே அனர்த்தத்தில் இருந்து நாட்டை விரைவாக மீட்க முடியுமாக இருந்தது. அதற்காக ஜனாதிபதி சார்ப்பாக அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்காெள்கிறேன்.எனவே அரசாங்கம் என்றவகையில் தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமே தவிர, பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.அதனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் அடக்குவதற்கும் தேவையான முறையில் முற்படையினரை பலப்படுத்த, 2030ல் மறுசீரமைக்கும் திட்டம் ஒன்று எமக்கு இருக்கிறது.அதற்காக ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிக்க இருக்கிறோம். அதேபோன்று எமக்கு பாரிய கடல் வளம் ஒன்று இருக்கிறது. அதனை பாதுகாப்பதும் எமது பாெறுப்பு. அதனால் அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு செல்கிறோம். அதற்காக எமது பாதுகாப்பு கவுன்சில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதி தலைமையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.மேலும் கடந்த அரசாங்க காலத்தில் தரம் குறைந்த மருந்து பொருட்களை கொண்டுவந்து, சுகாதாரத்துறையை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியிருந்தது. லாபமீட்டும் முக்கிய நிறுவனங்களை விற்பனை செய்தார். மின் உற்பத்தி நிலையங்களை பலவீனப்படுத்திவந்தார்கள்.ஆனால் எமது அரசாங்கத்தில் இவை அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்காக எமது முற்படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அதற்கு தேவையான பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டிருக்கிறோம்.மேலும் எமது சமுத்திர பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கைளையும் எமது கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். எமது கடல் வழியில் நூற்றுக்கணக்காக வியாபார கப்பல்கள் பயணிக்கின்றன. அவற்றை ஒழுக்குபடுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால் கடந்த காலங்களில் இந்த நடவடிக்கைகள் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதனால் வரக்கூயடி லாபம் அந்த நிறுவனங்களே பெற்றுக்கொண்டு வந்தன. ஆனால் இந்த நடவடிக்கைகளை கடற்படையினருக்கு ஒப்படைத்திருப்பதால், அனைத்து வருமானமும் தற்போது அரசாங்கத்துக்கே கிடைக்கின்றது.அதேபோன்று கடல் வழியாக பாரியளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகிறது. என்றாலும் கடந்த ஒன்றரை வருடத்தில் எமது கடற்படையினர் முழு மூச்சாக செயற்பட்டு. 150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றி இருக்கிறது.இரண்டு தினங்களுக்கு முன்னரும் நாங்கள் சர்வதேச கடல் எல்லையில் இருந்து வெளிநாட்டு கப்பல் ஒன்றை கைப்பற்றினோம். அதனால் நாட்டை பாதுகாப்பதற்கும் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் தேவைையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.