ETR.FM

காபூல் விமான நிலையத்தில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் ?

25.08.2021 09:38 1 நிமிட வாசிப்பு
காபூல் விமான நிலையத்தில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் ?

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை 12 மணிக்குள் சுமார் 12,000 பேர் வெளியேறினர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க இராணுவ விமானங்களில் சுமார் 6,400 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் அமெரிக்கா 70 ஆயிரத்து 700 பேரை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்