ETR.FM

எவ்பிஐ அதிகாரிகளின் பயணம் நிறைவு!

22.11.2026 15:49 1 நிமிட வாசிப்பு
எவ்பிஐ அதிகாரிகளின் பயணம் நிறைவு!
எல்லை தாண்டிய சைபர் நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நாட்டுக்கு வந்த அமெரிக்கஎவ்பிஐ மற்றும் நீதித்துறை அதிகாரிகள் குழுவின் ஒரு வார விசேட விஜயம் இன்று (22) நிறைவடைந்துள்ளது.    
கடந்த 16ஆம் திகதி முதல் இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, அமெரிக்க அதிகாரிகள் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸாரின் பிரதான புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர்.இதன்போது, அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்களை இலக்காகக் கொண்டு இயங்கும் மோசடி நிலையங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.அத்துடன், தற்போது செயற்பட்டு வரும் இரண்டு பிரதான மோசடி நிலையங்கள் தொடர்பான விசாரணை வியூகங்களும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.மேலும், பொலிஸாரின் சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களிலிருந்து டிஜிட்டல் சாட்சியங்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.அத்துடன், டிஜிட்டல் சாட்சியங்களை ஆய்வு செய்வது தொடர்பான விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பின் மூலம், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வலுவான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE உங்கள் விருப்பம்