ETR.FM

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .

21.11.2026 12:26 1 நிமிட வாசிப்பு
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், Clean Sri Lanka திட்டத்திற்காக 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஜனாதிபதியின் செலவின ஒதுக்கீடுகளின் கீழ் அதிகூடிய தொகையாகும். 


கடந்த காலங்களைப் போன்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்காக ஜனாதிபதி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE கதம்பம்