ETR.FM

குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகளாம்!

21.11.2026 12:29 3 நிமிட வாசிப்பு
வடக்கு மற்றும் கிழக்கில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் அதற்கு பாதுகாப்பு தரப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்களையே சாணக்கியன், சிறிதரன் ஆகியோர் முன்வைக்கிறார்கள். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை சீரழிப்பவர்களின் பின்னால் இருப்பவர்கள் தமிழர்களே. அதேபோன்று இங்கு நடக்கும் குற்றங்களின் பின்னால் இருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.    
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தமிழ் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் அரசியல் ரீதியிலான கொள்கைகள் மற்றும் அரசியல் ரீதியிலான இலக்குகள் உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைப்பது நியாயமானது.ஆனால் ஒரு சிலர் வெறித்தனமான கருத்துக்களை முன்வைப்பதுடன், வெறித்தனமாக இனவாதத்தை தூண்டி அதன்மூலம் தமிழ் மக்களால் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பறிப்பது மற்றும் அதில் இருந்து எப்படி அவர்களை தூரதள்ளி வைப்பது என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம் என்ற கிராமத்தில் 7 இளைஞர்களால் ஒரு பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது.அதேபோன்று கடந்த வாரத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டக்களப்பில் இருந்து வந்த பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய அந்த பிரதேசங்களில் கசிப்புக்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், இருக்கின்றனர். அவர்களின் உறவினர்கள் யார் என்று தேடிபார்க்க வேண்டும்.இந்நிலையில் இவர்கள் தொடர்பில் பேசுகின்ற போது சிறீதரன் வாய்திறக்க மாட்டார். அதேபோன்று மண் மாபியாக்கள், வட்டிக்காரர்கள் தொடர்பில் பேசும் போது வாய் திறக்க மாட்டார்கள். இதனால் அந்த வகையான செயற்பாடுகளின் பின்னால் சிறீதரன் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சந்தேகிக்கின்றனர்.தமிழ் டயஸ்போராக்கள் நம்புகின்றன மற்றும் அவர்களின் நம்பிக்கைக்குரிய அரசாங்கம் எதுவென்றால் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஆகும். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கிருப்பவர்கள் அவரை சந்தித்து அழுது புலம்பும் சம்பவங்களும் நடந்துள்ளன.அவர்களின் காணிகள் கொள்ளையடித்தல், கந்துவட்டிக்காரர்களின் பிரச்சினைகள் ஆகியன உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களை சீரழிப்பவர்களின் பின்னால் இருப்பவர்கள் யாரென தேடிப்பார்த்தால் தமிழர்களே இருக்கின்றனர்.அந்த பிரதேசத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் அங்குள்ள பொலிஸாருக்கு தொடர்பு இருக்கலாம். இராணுவத்திற்கும் தொடர்பு இருக்கலாம். அவர்களுக்கு அவ்வாறு தொடர்பு இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அதனை நிருபிக்க முடியுமான ஆதாரங்களை வழங்குமாறு அபிவிருத்தி குழு கூட்டங்களில் கூறியுள்ளோம். அங்கு வரும் இராணுவ அதிகாரிகளும் ஆதாரங்களை கோருகின்றனர்.குறிப்பாக சாந்தபுரம் பிரதேசத்தில் நடந்த கூட்டுபாலியல் வல்லுறவு சம்பவத்தின் பின்னர் நான் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது,இதன்பின்னரும் தாங்கள் கைகளை கட்டிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறினர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் அங்குள்ள இராணுவம், பொலிஸார் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தன.அதன் பின்னர் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற கொலைகாரர்கள்,வெள்ளை வானில் கடத்தியவர்கள், இளைஞர்களை கொலை செய்தவர்கள் யாரென தேடிப்பார்த்த போது நேற்றைய தினத்தில் அவ்வாறானவர்களுக்கு மரண தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருப்பவர்கள் யாரென தேடிப்பார்க்கின்ற போது கேடுகெட்ட அரசியல்வாதிகளே இருக்கின்றனர் என்றார்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE கதம்பம்