ETR.FM

உலக அமைதிக்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே.

21.11.2026 11:54 2 நிமிட வாசிப்பு
உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள புராணா கிலாவில் நடைபெற்ற முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிக உரையாடல் மன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் போர்கள் மற்றும் பதற்றங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா கலாசார மற்றும் நாகரிக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 
கலாச்சாரம்காண்
உலகளாவிய அமைதியைப் பேணுவதற்கு நாடுகளுக்கு இடையிலான கலாசாரப் புரிந்துணர்வும் நாகரிக உரையாடல்களும் மிகவும் அவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மன்றத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் மெசப்பத்தேமியாவிற்கும் இடையில் நிலவிய பண்டைய வர்த்தகத் தொடர்புகள் குறித்தும், பட்டுப்பாதை ஊடாக இந்தியா, சீனா, மத்திய ஆசியா மற்றும் யூரேசியப் பிராந்தியங்களுக்கு இடையில் உருவான தொடர்புகள் குறித்தும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
பண்டைய காலம் முதலே வர்த்தகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் ஊடாக நாடுகளுக்கு இடையில் வலுவான உறவுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரரசுகள் உலக வரைபடங்களை மாற்றியமைத்த போதிலும், நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல்கள் உலகின் சிந்தனைகளை மாற்றியமைத்து அவற்றைச் செழுமைப்படுத்தியுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE கதம்பம்