ETR.FM

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

30.06.2021 09:56 1 நிமிட வாசிப்பு
மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

மேல் மாகாணத்தில் இன்று (புதனிகிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்