உலகளவில் கொரோனாவால் 317,075,898 பேர் பாதிப்பு

13.01.2022 06:23:34

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 89 லட்சத்து 80 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 28 லட்சத்து 08 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 29 ஆயிரத்து 994 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்கா- 8 லட்சம்,  பிரான்ஸ் - 88 ஆயிரம், இத்தாலி - 1.96 லட்சம், இந்தியா - 2.41 லட்சம், ஸ்பெயின் - 1.79 லட்சம், அர்ஜென்டினா - 1.31 லட்சம்,  பிரிட்டன் - 1.29 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.