ETR.FM

கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,371பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு - கனடா

18.03.2021 09:33 1 நிமிட வாசிப்பு
கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,371பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு - கனடா

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 19ஆயிரத்து 239பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 31ஆயிரத்து 600பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 553பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 65ஆயிரத்து 085பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்