புதிய திரிவுக்கு மூ என்று பெயரிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்
02.09.2021 05:00:00
கடந்த ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிவுக்கு “மூ” என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று நடந்த வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்த ஸ்தாபனத்தின் அதிகாரிகள், பீ.1.621 என்று இந்த பிறழ்வை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.