ETR.FM

கிளிநொச்சியில் மூதாட்டி மரணம் கொரோனா என உறுதிப்படுத்தல்

02.10.2021 06:36 1 நிமிட வாசிப்பு
கிளிநொச்சியில்  மூதாட்டி மரணம்  கொரோனா என உறுதிப்படுத்தல்

கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 72 வயதுடைய மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

அவருடைய பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

அதன்போதே அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்