ETR.FM

ரணில் – பஷில் மீண்டும் சந்திப்பு!

10.05.2024 08:11 1 நிமிட வாசிப்பு
ரணில் – பஷில் மீண்டும் சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி செயற்பாட்டு நிலையங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்