ஆப்கான் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளிநாட்டு விஜயம்

04.09.2021 06:58:56

ஆப்கானிஸ்தான் நெருக்கடி நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ப்ளின்கென் கட்டார் மற்றும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

நாளைய தினம் தமது இந்த விஜயம் அமைய உள்ளதாக நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணிகளுக்கான அமெரிக்காவின் விமான போக்குவரத்துக்கு முக்கிய தளமாக விளங்கிய கட்டாருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஜேர்மனியில் 20 நாடுகளின் அமைச்சர்களுடனான இணையவழி சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானியர்களை இடமாற்றம் செய்து மீளக்குடியமர்த்துவதற்காக உதவுவதில் அனைத்து நாடுகளுக்கும் பங்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.