ETR.FM

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

17.11.2021 06:39 1 நிமிட வாசிப்பு
நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 485 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 58 இலட்சத்து 83 ஆயிரத்து 630 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்து 957 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்