நிவாரணம் கிடைக்காவிடின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் – கம்மன்பில

14.10.2021 07:39:55

நிதியமைச்சிடமிருந்து நிவாரணங்கள் ஏதும் கிடைக்காவிடின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பெற்றோல் லீற்றரொன்றில் விலையை 15 ரூபாவினாலும், டீசல் லீற்றரொன்றில் விலையை 20 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைவிட, இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கம்மன்பில, அதற்காகத் திறைசேரியிடமிருந்து கிடைக்கபெறும் நிவாரணம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, நிர்மாணத்துறையில் மேலும் சில மூலப்பொருட்கள் சிலவற்றின் விலைகள் பெரும்பாலும் அதிகரித்துள்ளதால் குறித்த பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.