கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,753பேர் பாதிப்பு- 61பேர் உயிரிழப்பு !
24.04.2021
11:18
1 நிமிட வாசிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 753பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 64ஆயிரத்து 587பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 883பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 86ஆயிரத்து 356பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 312பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை பத்து இலட்சத்து 54ஆயிரத்து 348பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.