நாய்க்கறி தடை தென் கொரிய அதிபர் பரிசீலனை

26.11.2021 08:16:12

'நாய்க் கறி விற்பனையை தடை செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அனைத்து பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்' என, தென் கொரியா அறிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய்க் கறி விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், தற்போது இளைய சமுதாயத்திடம் நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் 10 - 20 ஆண்டுகளுக்கு முன், லட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஓராண்டில் 10 - 15 லட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுகின்றன.