வவுனியா மன்னார் வீதி விபத்தில் ஒருவர் காயம்

14.10.2021 04:11:52

வவுனியா மன்னார் வீதியில் நேற்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இவ்விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில் , 
வவுனியா வேப்பங்குளம் மன்னார் பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்து கொண்டிருந்த கூலர் வாகனம் சமுர்த்தி வங்கிக்கு முன்னால் சென்ற போது திடீரென்று பிரேக் பிடித்ததால் பின்னர் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது .
 
இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது . சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்துக் காவற்துறையினர் . மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .