ETR.FM

இன்று சர்வதேச வன தினம் !

21.03.2021 08:11 1 நிமிட வாசிப்பு
இன்று சர்வதேச வன தினம் !

இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில், சர்வதேச வன தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, கடந்த 2012 நவம்பர் 28 ஆம் திகதி, சர்வதேச வன தினமாக மார்ச் 21 ஆம் திகதியை அறிவித்தது.

இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013 முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச வன தினம் அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.

இதேவேளை இலங்கையிலுள்ள வனங்களை பாதுகாப்பதற்கு முறையான திட்டங்களை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்