மலேசியாவுக்கு அருகில் ஏதிலிகள் படகு கடலில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழப்பு

16.12.2021 06:46:42

மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜொகர் மாகாணத்தில் ஏதிலிகள் படகு கடலில் மூழ்கி அனர்த்தத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த அனர்த்தத்தில் மேலும் 25 பேரை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இப்படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 60 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட மலேசிய பாதுகாப்பு படையினர் 25 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஏனையவர்களை தேடும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.