ETR.FM

மலேரியா அற்ற நாடாக எகிப்து அறிவிப்பு!

25.10.2024 08:22 1 நிமிட வாசிப்பு
மலேரியா அற்ற நாடாக எகிப்து அறிவிப்பு!

மலேரியா அற்ற நாடாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது.

அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம்  எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த அத்தாட்சிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எகிப்துடன் சேர்த்து உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகில் ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் பேர் மலேரியாவினால் உயிரிழக்கின்றனர் என்பதும்  அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்