ETR.FM

விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

07.10.2021 06:56 1 நிமிட வாசிப்பு
விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா தடுப்பிற்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் போதே சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free) கொள்வனவுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விமான நிலையத்திற்கு வந்திறங்கும் (முழுமையாக தடுப்பூசி பெற்ற) சுகாதார அலுவலகத்தினால் தடுப்பூசி சான்றிதழில், அனுமதி பொறிக்கப்பட்ட பயணிகளுக்கு சுங்கத் தீர்வை இல்லாத கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கொள்வனவுகளை பயணிகள் வேறொரு நாளில் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்