ETR.FM

தொடர்ந்து மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

28.06.2021 19:25 1 நிமிட வாசிப்பு
தொடர்ந்து மரண தண்டனை கைதிகள்  உண்ணாவிரதப் போராட்டம்

வெலிக்கடை, மஹர மற்றும் பூசா சிறைகளில் மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது 10 கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், மேலும் 150 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மஹர சிறையில் 70 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஒரு கைதி பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் பொது மன்னிப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என நேற்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்