அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து புவியியல் ஆய்வு மாயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஃபோட் பிளேர் நகரில் இருந்து தென்கிழக்கில் 165 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடைமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை. எனினும் திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மிக கடுமையான நிலநடுக்க தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 5.30 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. நவம்பர் தொடக்கத்தில் போர்ட் பிளேரின் தென்கிழக்கில் அதே அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் நடுக்கம் 16 கிமீ ஆழத்தில் இருந்தாலும், சமீபத்திய நிலநடுக்கத்தின் கணிசமான ஆழமான நடுக்கம் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.