ETR.FM

இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மறுப்பு

17.02.2021 09:40 1 நிமிட வாசிப்பு
இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மறுப்பு

இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களின் இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொவிட் 19 தடுப்பூசியை மாவட்ட ரீதியிலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செலுத்துவதற்கான வசதிகள் உள்ள போதிலும், அதனை இராணுவ வைத்தியசாலையில் செலுத்துவதற்கான காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்