ETR.FM

கடந்த 24 மணி நேரத்தில் 1,182 பேர் கைது!

03.01.2024 11:33 1 நிமிட வாசிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 1,182 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 287 கிராம் ஹெரோயின், 5.4 கிலோ கஞ்சா, 246 கிராம் ஐஸ் போதைப்பொருள், 19,052 கஞ்சா செடிகள் மற்றும் பல போதைப் பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், 47 பேர் மறுவாழ்வு நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்