உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.06 கோடி ஆக அதிகரிப்பு!!
13.02.2022 12:26:55
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 410,674,556 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 74,062,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 87,556 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 330,783,253 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,828,531 பேர் உயிரிழந்துள்ளனர்.