ETR.FM

தீவகத்தில் கனேடியத் தூதுவர்!

13.10.2024 09:34 1 நிமிட வாசிப்பு
தீவகத்தில் கனேடியத் தூதுவர்!

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்தீவக பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். நேற்றுக் காலை யாழ்.புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமுக நிலைய மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

  

சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ, தீவக பெண்கள் வலையமைப்பினர், தீவக பகுதி கடற்றொழில் அமைப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்