ETR.FM

யாழில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி - பெண்ணாக மாறிய ஆண்

10.02.2021 09:00 1 நிமிட வாசிப்பு
யாழில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி - பெண்ணாக மாறிய ஆண்

யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சையொன்று வெற்றியளித்துள்ளது.

இவ்வாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர், மட்டக்களப்பைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணரான இளஞ்செழியன் பல்லவன் என்பரே இந்த பாலியல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

இவ்வறுவை சிகிச்சை 12 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்