ETR.FM

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) நாளை ஆரம்பம் !

28.03.2021 08:34 2 நிமிட வாசிப்பு

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரையில் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறித்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாணவர்களை பாடசாலை சூழலுக்கு பழக்கப்படுத்துவதோடு, அவர்களது உளவியல் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களை பரீட்சைகள் அல்லது போட்டிகளுக்கு வழிநடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை http://www.lara.gov.in. என்ற தமது இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்