இணையத்தள சேவைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டம்!
04.04.2024 07:36:21
இஸ்ரேலில், இணையத்தள சேவைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டின் தேசிய இணையத்தள சேவையகம் எச்சரித்துள்ளது.
காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேலைக் குறிவைத்து ஈரான் இணையத்தளத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வருகிற 7ஆம் திகதி #OpIsrael என்ற ஹேஷ்டேக் பெயரில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் மக்களை எச்சரிக்கையுடள் இருக்கும்படி, அந்நாட்டின் தேசிய இணையதள சேவையகம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.