ETR.FM

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,343பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு !

05.04.2021 08:08 1 நிமிட வாசிப்பு
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,343பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு !

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து மூவாயிரத்து 988பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 62பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 58ஆயிரத்து 402பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஒன்பது இலட்சத்து 22ஆயிரத்து 524பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்