ETR.FM

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயரும் கொரோனா

03.02.2022 09:36 2 நிமிட வாசிப்பு
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயரும் கொரோனா

 உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.50 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 847 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 17 ஆயிரத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,59,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 2,398 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட இன்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 164,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 991 பேர் மரணமடைந்துள்ளனர்.பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 1,88,552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 946 பேர் பிரேசிலில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். 1,56,919 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்