வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனை!

10.08.2022 10:31:11

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. . இதில் வாள்வீச்சு இறுதிபோட்டியில் சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை ,எதிர்கொண்டார். இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.