இந்தியா - அமெரிக்க சுகாதார உறவில் புதிய உச்சம்

30.12.2021 07:35:03

''இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதால் இந்திய - அமெரிக்க சுகாதார உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது'' என அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்து கூறினார்.

இந்தியாவில் நேற்று முன்தினம் 'கோவோவாக்ஸ் கோர்பிவாக்ஸ்' ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவோவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் இது பற்றி அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்து கூறியதாவது:
இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா இடையேயான சுகாதார உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய- அமெரிக்க சுகாதார உறவு வலுப்பெற்றுள்ளது உலகத்துக்கே நன்மை தரும்.கொரோனா தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது பல ஏழை நாடுகளுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை வழங்க இந்தியாவின் அனுமதி வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.