சுவிஸ் குடிமக்களாக ஆக விரும்புவோருக்கு..

02.05.2022 09:55:44

சுவிஸ் குடிமக்களாக ஆக விரும்பும் அனைவரும், அதற்காக சுவிஸ் குடியுரிமைத் தேர்வு (citizenship exam) ஒன்றை எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

பொதுவாக இத்தகைய தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளைப் போல அல்லாமல், சுவிஸ் குடியுரிமைத் தேர்வில், சில எதிர்பார்க்க முடியாத வகையிலான வித்தியாசமான கேள்விகள் கேட்கப்படுவதுண்டு.

கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான தேர்வுகளில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன. அவை குறித்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல்...

உள்ளூர் உயிரியல் பூங்காவில் காணப்படும் கரடிகள் மற்றும் ஓநாய்கள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?

இது என்னடா கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்தக் கேள்விக்கான விடை தெரியாததால், இத்தாலியர் ஒருவரின் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது !

பிறகு, அவர் சுவிஸ் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, மாகாண அதிகாரிகளின் முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டது.