ETR.FM

கேகாலையிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- எவருக்கும் பாதிப்பில்லை

28.11.2021 16:49 1 நிமிட வாசிப்பு
கேகாலையிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- எவருக்கும் பாதிப்பில்லை

கேகாலை- ரொக்ஹில் – கஹட்டபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பொன்று, தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளதாக கூறப்படுகின்றது.

வீட்டின் உரிமையாளர், தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு குளியலறைக்கு சென்றவேளையில் இந்த வெடிப்புச் சம்பவம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின்போது, சமையல் எரிவாயு கொள்கலனுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அடுப்பு வெடித்து, அதன் பாகங்கள் சமையலறை முழுவதும் சிதறி காணப்பட்டன என வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்