வைரஸ் காத்திருக்காது... நீங்களும் காத்திருக்கக்கூடாது !

06.12.2021 16:50:58

 

 ஒமைக்ரான் கொரோனா மாறுபாடு பரவி வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் புதிய கொரோனா மாறுபாடு தற்போது பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்க மற்ற நாடுகளை போலவே பிரித்தானியாவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பயணவிதிகளை அமுல்படுத்தி வருகிறது.

பிரித்தானியாவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 246 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையே, தடுப்பூசி போடப்படாதவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள் என ஆலோகர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் பதிவிட்டதாவது, பிரித்தானியா முழுவதும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முன் வந்து தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.