வனவிலங்குப் பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாய்

07.02.2022 04:56:06

வனவிலங்குப் பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாயை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த கொடூரமான சம்பவம் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு வனவிலங்குப் பூங்காவில் அந்தத் தாய் குழந்தையை தூக்கி 16 அடி பள்ளத்தில் இருந்த கரடியின் குகை நோக்கி வீசியுள்ளார்.

இரை போட்டதாக நினைத்து ஓடி வந்த சூசூ என்ற அந்தக் கரடி குழந்தையை மோப்பம் பார்த்து நகர்ந்து விட்டதால் குழந்தை உயிர் தப்பியது.

பூங்கா ஊழியர்கள் உடனடியாக கரடி மீண்டும் குழந்தையை  நெருங்க விடாமல் கூண்டில் அடைத்து குழந்தையை மீட்டனர்.