இலங்கையில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிப்பு

27.01.2022 06:43:44

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இது 100 வீதமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக நாட்டில் பதிவாகும் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தால், கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கலாம் என்று அறிக்கைகள் வெளிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எனவே இதுவரை கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி பெறாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் கூறினார்.