ETR.FM

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,548பேர் பாதிப்பு- 33பேர் உயிரிழப்பு !

08.07.2021 10:22 1 நிமிட வாசிப்பு
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,548பேர் பாதிப்பு- 33பேர் உயிரிழப்பு !

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 548பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 49இலட்சத்து 90ஆயிரத்து 916பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 301பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 17ஆயிரத்து 116பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 393பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 45ஆயிரத்து 499பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்