யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தால் வீதியில் காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்! பரபரப்பு சம்பவம்

24.12.2023 14:47:13

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் ஒன்று விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.  

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹம்பக பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி பேருந்துக்காக காத்திருந்த ஒருவரை மோதியுள்ளது.