ETR.FM

5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி

03.11.2021 09:43 1 நிமிட வாசிப்பு
5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி

5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் மற்றும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிசோதனைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்நாட்டிலுள்ள குறித்த வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவில் இளம் வயதினருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகளை நிறைவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகளை அமெரிக்கா ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இதனூடாக 28 மில்லியன் சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்