ETR.FM

ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் புதிய தகவல்!

11.11.2026 08:21 2 நிமிட வாசிப்பு
ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் புதிய தகவல்!

ஈரான் மீது தாக்குதல் நடத்துமாறு தினமும் டிரம்புக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவர்களை தினமும் தொடர்புகொண்டு, ஈரான் மீது மீண்டும் இராணுவ தாக்குதல்களை தொடங்குமாறு வலியுறுத்தி வருவதாக Financial Times அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, நெதன்யாகு தொடர்ந்து டிரம்புடன் பேசி, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து வருகிறார்.

  

ஆனால் வெள்ளை மாளிகையிலும், அதற்கு வெளியிலும் உள்ள சில முக்கிய தரப்புகள் போர் தீவிரமடைவதைத் தவிர்க்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட பிராந்திய தலைவர்களுடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகத் தெரிகிறது என்று டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது சமூக வலைதள பதிவில், புதிய இராணுவ நடவடிக்கையை விட ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல் முற்றுகை நடவடிக்கைகளையே விரும்புவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாதகமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்கள் டிரம்பை தொடர்புகொண்டு, மோதலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமெரிக்கா அல்லது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தினால், அதற்கு கடுமையான மற்றும் எதிர்பாராத பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்