ETR.FM

யொஹானிக்கு காணி-அமைச்சரவை அனுமதி

21.12.2021 06:25 1 நிமிட வாசிப்பு
யொஹானிக்கு காணி-அமைச்சரவை அனுமதி

இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் அவருக்காக 9.68 பேர்சஸ் காணியை பரிசாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் இன்றைய அமைச்சரவையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்